அக்குபஞ்சர் என்றால் என்ன ?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் புதிய மருத்துவ முறையே அக்குபஞ்சர். இது அனைத்து வியாதிகளையும் அறுவை சிகிச்சையின்றி, மருந்துகளின்றி குணப்படுத்தக்கூடியதாகும். பெயரைக் கேட்டால் யாருக்கும் இது என்ன வைத்தியமுறை என்று தெரியாது. ஆயினும், இதன் அடிப்படை தெரிந்தால், ‘அட இதுதானா; இது நமது பழமையான கலை ஆயிற்றே’ என்று சொல்லிவிடுவார்கள்.

நம் முன்னோர்களின் உடல் நலக் கலைகளில் ஒன்றுதான் வர்மம். உடலில் உள்ள நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் வியாதிகளை நல்ல முறைகளில் சரி செய்யலாம்.

...

இது நம் சித்தர்கள் மற்றும் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் அற்புதக் கலையாகும். இக்கலைதான், நமது தேசத்தில் இருந்து சீன தேசத்திற்குச் சென்று, அவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்த, போதிதர்மர் மூலம் அங்கு பரவி, அதில் சில மாற்றங்களுடன் வேறு பெயரில், வியாதிகளை நீக்க பக்க விளைவுகள் இல்லாத அக்குபஞ்சர் சிகிச்சை முறை என்று இங்கே, அறிமுகமாகி இருக்கிறது.

நம்முடைய தொன்மையான தோப்புக்கரணம், தற்போது சூப்பர் பிரைன் யோகா என்ற பெயரில் நம் நாட்டிற்கு புதிய வெளிநாட்டு பயிற்சிமுறை போன்று வரவில்லையா ?. அவ்வாறுதான் அக்குபஞ்சரும்.

உடலில் இருக்கும் சக்தி மண்டலம், உயிர் ஆற்றலை இரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் பரவச்செய்யும். உடலில் பாதிப்பு உள்ள இடங்களில் இந்த ஆற்றல் குறையும்போது, உடல் தன்னிச்சையாக வெளிப்புற ஆற்றலின் மூலம் அல்லது காற்றிலோ, சூரிய ஒளியிலோ உள்ள சக்தியின் மூலம் பாதிப்பை விலக்கிவிடும். சில பாதிப்புகள் குணமாகத் தாமதமாகும்போதுதான் நமக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றி, சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

மனித உடல், மருந்துகள் ஏதுமின்றி, தன்னைத்தானே, தற்காத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கது எனும் முன்னோர்களின் வாக்குதான் இதன் தத்துவம்.

உடலில் பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்று அறிந்து, அந்த பாதிப்பைச் சரிசெய்யும் ஆற்றல், உடலில் சில இடங்களில் உள்ள நரம்புகளிலும் அவற்றின் இணைப்புகளிலும் உள்ளது. அங்கு அந்த ஆற்றலைத் தூண்டிவிடுவதன் மூலம், வியாதிகளைப் படிப்படியாக விலக்க முடியும் என்பதே அக்குபஞ்சர்.

அக்குபஞ்சரின் சிறப்பம்சம் :

இது பக்க விளைவுகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இல்லாத சிகிச்சை முறையாகும். ஊசி மட்டும் உண்டு. அதுவும் மருந்தை சிரிஞ்சில் ஏற்றி உடலில் செலுத்தும் ஊசி அல்ல; உடலில் உள்ள ஆற்றலைத் தூண்டி, பாதிப்புகளை நீக்க, குறிப்பிட்ட இடத்தில் சற்றுநேரம் வலியின்றி செருகிவைக்கப்படும் ஊசி. வியாதிகளின் பாதிப்பைப் பொறுத்து ஊசிகளின் எண்ணிக்கையும் சிகிச்சை பெறும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த சிகிச்சை முறைகளில், உடலில் உள்ள எல்லா பாதிப்புகளையும் அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளின்றி குணமாக்க முடியும்.

சந்தேகம்

சிலருக்கு இவ்வாறு ஒரு சந்தேகம் வரலாம். எனக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. அப்போது இந்த சிகிச்சையை, கை கால் மூட்டுகளில் செய்ய வேண்டுமா? இவ்வாறே எனக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது.  அப்போது இந்த சிகிச்சையை இடுப்பில் செய்ய வேண்டுமா ?.

பொதுவாக உடலில் வலி தோன்றிய இடங்கள், வலியை நமக்கு உணர்த்தகுகூடியவயே அன்றி, அவை அந்த வலிகளின் மூலக் காரணங்கள் அல்ல. மேலும், வலி என்பது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படக்கூடியதாகும். குறிப்பாக, கை கால் மூட்டு வலிகளின் காரணமாக விளங்குவது சிறுநீரகமாகும்.

...

சிறுநீரகத்தின் ஆற்றல் புள்ளிகள், கால் மூட்டுகளின் பின்பக்கம் உள்ளன. பொதுவான வலிகளுக்கு பாதத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள புள்ளிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் வலிகள் நீங்கிவிடும்.

கை கால் மூட்டு வலிகளின் பாதிப்புகள் விலக, அவற்றைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மையங்கள் உள்ள இடங்களில், ஊசிகளைச் செருகி சிகிச்சை அளிக்கும்போது ஆற்றல் அந்த இடத்தில் மேம்படுத்தப்பட்டு வலிகள் குறைவதை உணரலாம்.

Testimonials

Ahmed

Abdullah